Sunday, June 16, 2013

ஆண்ட்டிமணி யின் உண்மை கந்தகம் தயாரித்தல்

ஆண்ட்டிமணி யின்  உண்மை  கந்தகம் தயாரித்தல்:


 சுத்திசெய்யபடாத  ஆண்ட்டிமணியை எடுத்து பொடித்து அதை தட்டையான கண்ணாடி பாத்திரத்தில் போடவும்;ஞானிகளின் கல்லில்லிருந்து பெறப்பட்ட அதன் சொந்த உப்பும்,புளிப்பு திரவமும் சேர்த்து வைக்கப்பட்ட காடியை ஊற்றவும்,இதனை இறுக மூடி நன்கு சிலை செய்து 40 நாட்கள் குதிரை சாணத்தில் புதைத்து வைக்கவும்,40 நாட்கள் சென்ற பின் எடுக்க ரத்தம் போன்று,சிவந்த திரவமாக இருக்கும்.அடியில் கல்  பொருளும் கலந்திருக்கும்.ரத்தம் போன்ற திரவத்தை மட்டும் பிரித்து வைக்கவும்,பின்பு பாத்திரத்தில் உள்ள பொருளுடன் புதிய காடியை (புளிப்பு திரவம் ) ஊற்றவும்.மறுபடியும் குதிரை சாணத்தில் புதைத்து 40 நாட்கள் கழித்து மறுபடியும் முன் போல் பிரிக்கவும்;இப்படி புளிப்பு திரவம் சிவப்பு நிறம் அடையாமல் இருக்கும் வரை இதனை திரும்ப, திரும்ப செய்யவும்.


இவ்வாறு  எடுக்கப்பட்ட ரத்த நிற திரவத்தை வடிகட்டவும்.பின் கண்ணாடி பாத்திரத்தில் உள்ள உப்புடன் ஊற்றி முன் போல் புதைக்கவும்,40 நாட்கள் வைக்கவும்.பின் எடுத்து பார்க்க கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.இதனை வாலையில் இட்டு மிதமான தீ யில் வடிக்கவும்.காடி முழுவதும் வெளிஏறிய பின் வாலையினுள் மெழுகு போன்ற சற்று இறுகிய பொருள் இருக்கும்.இதனை எடுத்து பொடிக்கவும் இதை சுத்தி செய்த மழை நீரில் கரைக்கவும்.இதனை குறைந்த வெப்ப நிலையில்  உலர்த்தவும்.அந்த பொடியை மூன்றடுக்கு வாலையில் இட்டு,உயர் சுத்தி செய்ய பட்ட ஸ்பிரிட் ஆப் ஒயின் (sprit of wine )பொடிக்கு 3 விரல் உயரம் இருக்குமாறு விட்டு (ஊற்றி )இருக மூடி இரண்டு மாதம் மிதமான வெப்ப நிலையில் வைக்கவும்.இரண்டு மாதம் பின் எடுக்க மாணிக்கம் போன்ற ஒளி ஊடுருவும் தன்மை கொண்ட காடி நீர் கிடைக்கும்.இதன் அடியில் கருப்பு நிறம் கொண்ட பொருள் இருக்கும்,இதனை தனியே பிரித்து வைக்கவும்.மாணிக்கம் போன்ற காடி நீரை வாலையில் ஊற்றி மிதமான தீயில் வைக்கவும் வடிக்கும் போது தங்க நிறம் தோன்றி மறையும்.வாலையில் சிவப்பு திரவம் வடியும்.இதனை  மூன்றடுக்கு வாலையில் 10இரவு 10பகல் மிதமான சூட்டில் வைக்க,முதலில் ஊற்றிய ஸ்ப்ரிட் ஆப் ஒயின் என்பது எண்ணையின் மீது மிதந்து கொண்டிருக்கும்.இவற்றை பிரித்து எண்ணையை தனியே எடுத்து வைக்கவும்.முதலில் எடுத்து கொள்ள பட்ட பொருள் சுத்தி செய்ய படாத ஆண்டிமணி கடைசியில் நமக்கு கிடைத்தது ஆண்ட்டிமனியின் எண்ணை (oil  of antimony ). இதுவே கல்லாக மாற்றப்பட வேண்டியது,மாற்றப்பட்ட கல்லுக்கு stone of fire என்று பெயர் .அந்த எண்ணை உயர்தரமான இனிப்பு சுவையை கொண்டிருக்கும்.இதற்கு  ஒப்பாக எதுவும் இல்லை.இந்த எண்ணை  தான் ஆண்டிமணியின் (ஞானிகளின்) கந்தகம்.









1.பவளத்தின் திரவத்தில் இந்த எண்ணை கலந்து கொடுக்கப்பட்டால் சொறி ,சிரங்கு ,குஷ்டம் ,தோல் நோய் கள்,ரத்த தோஷத்தால் வந்த அனைத்து தோல் நோய்களும் குணமாகும்.இதய சோர்வு நீங்கும்.இதய வால்வுகளை சீர் செய்கிறது.இதயம் பலப்படுகிறது.
2.முத்தின் திரவத்தில் கலந்து கொடுக்க ஞாபக சக்தி உயரும்.

மேலும் விவரங்களுக்கு :


           whats App no.+91 9894618455.

4 comments:

  1. புளிப்பு திரவம் என்றால் என்ன?

    ReplyDelete
  2. சாமி வணக்கம்,
    மன்னிக்கவும், நீண்ட நாட்கள் தொடர்பு கொல்லாமைக்கு... நான் சில பிரச்சனைகள் காரணமாக தொடர்ந்து தங்களை தொடர்பு கொள்ள இயலவில்லை... நான் இப்பொழுது திரு. கண்ணன் அவரிடம் பேசுவது கிடையாது.. மேலும் பஸ் விட்டவுடன் நான் தங்களை நேரில் சந்திக்கின்றேன்..
    தங்கள் ஆசிர்வாதத்தில்...
    பணிவுடன்...
    மாரிகண்ணு

    ReplyDelete